--- --:--:-- --

‘ஸ்டாலின்தான் வர்றாரு’ விளம்பரம்: தேர்தல் ஆணையம் வைத்த ‘செக்’!

stalin ad

ஸ்டாலின்தான் வர்றாரு என்ற விளம்பரப் பதாகைகள் வைப்பது தொடர்பாக, திமுகவிற்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

 

தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே, அதிமுக – திமுக இரண்டும் தேர்தல் பிரசாரங்களை முழுவீச்சில் தொடங்கிவிட்டன். அதிமுக தரப்பில் வெற்றி நடைபோடும் தமிழகமே என்ற பாடலுடன் விளம்பரம், டிவி, நாளிதழ்கள், ரேடியோ, இணையதளம் என எல்லா பக்கமும் ஒலித்தது.

 

திமுகவும் தன் பங்கிற்கு சற்றும் சளைக்காமல் பதிலடி கொடுத்தது. ஸ்டாலின் தான் வர்றாரு, நல்லாட்சி தர போறாரு என்ற பாடல், திமுக கூட்டங்களிலும் திமுக ஆதரவு டிவிக்களிலும் கேட்ட முடிந்தது. எனினும் அதிமுகவின் ‘வெற்றி தரும் தமிழகமே’ பாடலுக்கு கிடைத்த ரீச் இதற்கு கிடைக்கவில்லை.

 

இதனால், விளம்பர யுக்தியை மாற்றத் தீர்மானித்த திமுக, தமிழகம் முழுவதும் 9500 இடங்களில் ஸ்டாலின் தான் வர்றாரு, நல்லாட்சி தர போறாரு என்ற வாசகங்களுடன் விளம்பரப் பதாகை வைக்க முடிவு செய்தது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம் கடிதம் மூலம் திமுக அனுமதி கேட்டிருந்தது.

 

இந்நிலையில், ஸ்டாலின் தான் வர்றாரு, நல்லாட்சி தர போறாரு என்ற வாசகங்களுடன், விளம்பர பதாகை வைப்பது தொடர்பான திமுக கடிதத்திற்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

 

அதில், விளம்பரம் தொடர்பான உண்மைத்தன்மை அனைத்திற்கும் அந்த விளம்பரத்தை வெளியிடுபவர்தான் பொறுப்பாக வேண்டும். கடைகளில் விளம்பர பதாகை வைக்க வேண்டுமானால், அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்றாக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், விளம்பரப்பதாகை வைப்பது தொடர்பாக, அந்தந்த பகுதி மாவட்ட அதிகாரியேமுடிவு செய்வார்கள். விளம்பர பதாகை வைப்பது தொடர்பான செலவுகளை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும் எனவும் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தேர்தல் ஆணையத்தின் இந்த கட்டுப்பாடுகளால், அடுத்து திமுக என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon