--- --:--:-- --

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் விசிகவில் முக்கிய பொறுப்பு..!

2

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் நியமனம் ஆகியோருக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் விசிக கடந்த முறை 6 இடங்களில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை கூடுதலாக 2 இடங்களைச் சேர்த்து 8 தொகுதிகளில் போட்டியிட்டது. எனினும், ஆளூர் ஷாநவாஸ், பாலாஜி, பனையூர் பாபு ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால், அவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது.

 

ஆனால், ஒரு முறை கூட வாய்ப்பு கிடைக்காதவர்கள் பலர் இருப்பதால் இந்த முடிவு எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டதாக திருமாவளவன் விளக்கம் அளித்தார். தொடர்ந்து ஆளூர் ஷாநவாஸ், ஒரு கட்சியில் யாருக்கு எப்போது எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது தலைமையின் முடிவாகும் என்றும், அது எதுவாயினும் ஏற்றுக் கொள்வதே சிறந்த அறமாகும் என்றும் தெரிவித்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டார்.

 

 

இந்த நிலையில் தான் தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஆளூர் ஷாநவாஸ் மற்றும் பாலாஜி ஆகிய இருவருக்கும் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கியிருக்கிறார் திருமாவளவன். விசிக மாநில முதன்மைச் செயலாளராக நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷானவாஸை நியமித்து அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்எஸ் பாலாஜி, விசிக பொருளாளராகவும், ஆளூர் ஷாநவாஸ் மாநில முதன்மைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon