--- --:--:-- --

ஈரான் நாட்டில் நிலநடுக்கம்

7

ஈரானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்களிடையே பீதி நிலவுகிறது. நாட்டின் வடமேற்கு பகுதியில் ஆப்கான் எல்லையோரத்தில் உள்ள சங்சன் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 என்ற அளவில் பதிவாகியுள்ளது.

 

இந்த நிலநடுக்கம் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பல ஊர்களில் கட்டடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், உயிர்சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Right Menu Icon