அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மாநிலத்தில் நிலநடுக்கம்..!
அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மாநிலத்தில் அடுத்தடுத்து லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் சில பகுதியில் இன்று அதிகாலை 1.22 மணிக்கு 3.6 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அருணாசலப் பிரதேசத்தின் பான்கேட் பகுதியில் இன்று அதிகாலை 1.02 மணிக்கு 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் மையம் அறிவித்துள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கங்களால் வட மாநில மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அசாம், மணிப்பூர் ,மேகாலயா என வட மாநிலங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.







