ஆறாவது முறையாக திருமணம் செய்ய முயன்ற கல்யாண சாமியார்..!
உத்திர பிரதேசத்தில் திருமண தகவல் மையம் மூலம் வலை வீசி ஆறாவது முறையாக திருமணம் செய்ய முயன்ற கல்யாண சாமியார் கைது செய்யப்பட்டார். கான்பூர் மாவட்டம் கித்வாய் நகர் பகுதியை சேர்ந்த அனுஜ் என்பவர் பாபா கல்யாண் சேவா அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார்.
பாபா என்று அழைக்கப்படும் அவர் தன்னை நாடி வரும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மந்திரம் தந்திரம் செய்வதாக கூறி பாலியல் வலையில் சிக்க வைத்துள்ளார். இதுவரை 5 பெண்களை திருமணம் செய்த அவர் தற்போது ஆறாவது திருமணம் செய்வதற்காக திருமண தகவல் மையத்தில் தனது சுயவிவரத்தை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில் அவரால் பாதிக்கப்பட்ட ஐந்தாவது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அனுஜை கைது செய்தனர்.







