--- --:--:-- --

அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரே நாளில் 15 பேரை கடித்து குதறிய நாய்..!

9

துரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரே நாளில் 15 பேரை கடித்து குதறிய வெறிநாயை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர். நேற்று ஒரே நாளில் மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் என 15க்கும் மேற்பட்டோர் வெறி நாய் கடித்து குதறியது.

 

அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் இந்த மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து செல்வதற்காக மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக மாநகராட்சியில் புகார் கொடுக்கப்பட்டது.

 

புகாரின் அடிப்படையில் மருத்துவமனை வளாகத்தை சுற்றி வந்த வெறி நாய்களை பிடித்து மாநகராட்சி ஊழியர்கள் அவற்றை நாய்களை பிடித்து செல்லும் வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon