பணிப் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி மிரட்டல் விடுத்த டாக்டர் கைது..!
சென்னை தாம்பரம் அருகே பணிப் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி மிரட்டல் விடுத்ததாக டாக்டர் ஒருவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முடிச்சூர் சிடிஓ காலனியை சேர்ந்த மருத்துவர் தீபக் என்பவர் தனது வீட்டில் வேலை பார்த்த இளம்பெண் ஒருவருடன் அத்துமீற முயன்றதால் அவர் வேலையை விட்டு நின்றதாக கூறப்படுகிறது.
சம்பள பாக்கியை வாங்குவதற்காக சென்றபோது தனது நண்பரான ஆனந்த் அமிர்தராஜ் என்பவருடன் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இதுபற்றி வெளியே சொன்னால் நகையை திருடியதாக போலீசாரிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன் என மிரட்டியதாகவும் பணிப்பெண் புகார் அளித்தார்.
விசாரணைக்கு பிறகு மருத்துவரையும், தனியார் வங்கியில் பணி புரிவதாக கூறப்படும் அவரது நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.







