--- --:--:-- --

1 கிராம் தங்கம் விலை இன்று எவ்வளவு தெரியுமா?

2

பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கத்தின் விலை தற்போது ரூ.1 லட்சத்தை தாண்டி ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இது சாமானிய மக்களிடம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நேற்றைய ( பிப்ரவரி 16) நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.14,440க்கும், சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.115,520க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று மீண்டும் தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.14,320க்கும், சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1,14,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.12,250க்கும் சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.98,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.265க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,650,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon