--- --:--:-- --

8 லட்சம் கலைஞர் கனவு இல்லம் – பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள்

1

மிழக அரசின் 2026 -27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று காலை 9.30 மணியளவில் சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். “எல்லார்க்கும் எல்லாம்” என்ற கொள்கை அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில், கல்வி, மகளிர் நலம், இளைஞர் மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறையைத் திறம்படக் கையாண்டு, மாநிலத்தின் பொருளாதாரத்தை இரட்டை இலக்க வளர்ச்சியில் கொண்டு செல்வதே இந்த பட்ஜெட்டின் நோக்கம் என்று நிதியமைச்சர் தனது உரையில் உறுதியளித்துள்ளார்.

 

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: இத்திட்டத்தின் கீழ் 1.31 கோடி மகளிர் பயன்பெற்று வருகின்றனர். சமீபத்தில் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான உரிமைத் தொகை ரூ. 3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ. 5,000 ஒரே தவணையாக மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. விடியல் பயணம்: அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் மூலம் மகளிர் இதுவரை 881 கோடி முறை பயணித்துள்ளனர். இதன் மூலம் ஒரு பெண்ணுக்கு மாதம் சராசரியாக ரூ. 888 வரை சேமிப்பு கிடைக்கிறது.

 

சொத்து வரிச் சலுகை: பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் ரூ. 10 லட்சம் வரையிலான அசையாச் சொத்துகளுக்கு பதிவு கட்டணம் 1% குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 3,71,705 நபர்கள் இதுவரை பயனடைந்துள்ளனர்.

 

பள்ளிக்கல்வித் துறை: இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு அதிகபட்சமாக ரூ. 48,534 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறை: உயர்கல்வித் துறைக்கு ரூ. 8,505 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

‘நான் முதல்வன்’ திட்டம் : ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் 48 லட்சத்திற்கும் அதிகமான திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு, மாணவர்கள் ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளுக்குச் சென்று சர்வதேசப் பயிற்சிகளைப் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

புதுமைப்பெண் & தமிழ்ப் புதல்வன்: அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் கீழ் 6.95 லட்சம் பேரும், மாணவர்களுக்கு ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் 5.40 லட்சம் பேரும் மாதம் ரூ. 1,000 ஊக்கத்தொகை பெற்று வருகின்றனர்.
மடிக்கணினித் திட்டம்: 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்காக ரூ. 2,172 கோடி செலவிடப்பட்டுள்ளது.
காலை உணவுத் திட்டம்: 19.34 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் இத்திட்டத்திற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ. 1,284 கோடி செலவிடப்பட்டுள்ளது.

 

கலைஞரின் கனவு இல்லம் : 2030-க்குள் ‘குடிசைகள் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே 1 லட்சத்து 71 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், 2030-ம் ஆண்டிற்குள் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon