ஊழல் செய்ய ரூ.8,000 கூப்பன் அறிவித்த தி.மு.க – இ.பி.எஸ்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கடையநல்லூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக அரசின் மீதும், முதல்வர் ஸ்டாலின் மீதும் அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
தி.மு.க அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை விமர்சித்த இ.பி.எஸ், மக்களை ஏமாற்றி தி.மு.க ஆட்சிக்கு வந்தது. தற்போது ஊழல் செய்யவே ரூ.8000 மதிப்பிலான கூப்பன் வழங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த கூப்பன் மூலம் கமிஷன் பெற தி.மு.க. திட்டம் தீட்டியுள்ளது என்று குற்றம் சாட்டினார். மேலும், அ.தி.மு.க. பற்றிப் பேச ஸ்டாலினுக்கு எதுவுமே இல்லை என்றும் அவர் சாடினார்.





