--- --:--:-- --

விஜய் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது ஏன்? த.வெ.க விளக்கம்

6

விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால் வில்லிவாக்கத்தில் கூடியிருந்த த.வெ.க. தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய மாவட்ட செயலாளர் பூக்கடை முருகன், பாதுகாப்பு குறைபாடு காரணமாக விஜய்யின் வில்லிவாக்கம் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. மற்றொரு நாளில் விஜய் வில்லிவாக்கத்திற்கு வருவார் என்று தெரிவித்தார். இந்நிலையில், விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சரியானப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைப்படுத்துதல், முன்னெச்சரிகை நடவடிக்கைகளைக் கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதி தெருமுனை பிரசார கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் மட்டுமல்லாமல், அங்கே செல்வதற்கான வழிகளிலும் சென்னை காவல்துறை செயல்படுத்தாததால் தலைவர் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தெருமுனை பிரசார கூட்டத்தை ரத்து செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon