--- --:--:-- --

புறநகர் ரயில் சேவையில் தொடரும் குளறுபடி..!

10

சென்னை சேத்துப்பட்டில் சிக்னல் கிடைக்காத காரணத்தினால் கடந்த ஒரு மணி நேரமாகப் புறநகர் ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நின்று கொண்டிருப்பதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

 

மேலும், எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளால் தினமும் இதே போன்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில்கள் காத்திருக்க வேண்டிய நிலை நீடிப்பதால், பணிக்குச் செல்வோர் மற்றும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

Right Menu Icon