கொசுத் தொல்லையை கட்டுப்படுத்தாத பொதுப்பணித் துறை அலுவலர் பணியிடை நீக்கம்..!
மத்தியபிரதேசத்தில் முதலமைச்சர் தங்கிய அரசு விருந்தினர் இல்லத்தில் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்தாத பொதுப்பணித் துறை அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாயன்று சித்தி எனுமிடத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கியபோது கொசு தொல்லை இருந்துள்ளது. அதில் இருந்து காத்துக்கொள்ள கொசுவலை கூட இல்லை. இது குறித்துக் கூறியது இரண்டரை மணி அளவில் கொசுவிரட்டி மருந்து தெளித்துள்ளனர்.
அந்த கட்டிடத்தில் உள்ள தண்ணீர் தொட்டி அதிகாலை 4 மணிக்கு நிரம்பி வழிந்தபோது முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகானை மோட்டாரை நிறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பொதுப்பணித் துறையில் அவர் புகார் அளித்ததையடுத்து விருந்தினர் இல்லத்தை முறையாக பராமரிக்காத அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.






