--- --:--:-- --

உலகிலேயே பெரிய திருக்கைவால் மீன் கண்டுபிடிப்பு..!

1

லகிலேயே மிக அதிக எடை கொண்ட திருக்கை வால் மீன் கம்போடியாவில் பிடிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் மிகப்பெரிய திருக்கை மீனை பிடித்த மீனவர்கள் வியந்து போயினர். அதனை எடை போட்டபோது நம்பமுடியாத அளவுக்கு 300 கிலோ எடை இருந்தது.

 

மீனை அளந்த போது 13 அடி இருந்தது. வாழ்வில் இவ்வளவு எடை இருப்பது இதுவே முதன் முறை என்று மீன்கள் குறித்து ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2005 ஆம் ஆண்டு 290 கிலோ எடையுடன் பிடிபட்ட வால்மீன் தான் அதிக எடை கொண்டது என்ற பெருமையை பெற்றிருந்தது.

 

தற்போது கம்போடியாவில் சிக்கியுள்ள இந்த திருக்கை வால் மீன் தாய்லாந்து மீனின் சாதனையை முறியடித்துள்ளது.

 

Right Menu Icon