திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததால் அரசுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் பாரதிராஜா.!
திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு இயக்குனர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். பொது முடக்கத்தில் பல தளர்வுகளை அறிவித்திருக்கும் தமிழக அரசு திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளின்படி இருட்டிலிருந்து வெளிச்ச உலகிற்கு ஒளி காட்டி விதிகளைத் தளர்த்தி அனுமதி அளித்த முதலமைச்சருக்கும் எங்கள் குறைகளை காது கொடுத்து கேட்கும் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கும் நன்றி என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.







