மடகாஸ்கர் நாட்டில் வைரத் தவளை கண்டுபிடிப்பு..!
மடகாஸ்கர் நாட்டில் தவளை இனத்தின் புதிய வரவாக வைர நிறம் கொண்ட தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாண்டங் டீ ஆம்பர் தேசிய பூங்காவில் இந்த வைர தவளை இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த வகை தவளைகள் பல்லுயிர் பெருக்கத்துக்கு உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பூங்காவில் வைர தவளை மட்டும் இல்லாமல் பல்வேறு புதிய வகை உயிரினங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இங்கு பல்வேறு வகையான தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் நீர் வீழ்ச்சிகள் உள்ளன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வைர வகை தவளை இனம் விலங்கியல் விஞ்ஞானிகளுக்கு பல ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது.







