--- --:--:-- --

மணப்பெண்ணுக்கு மறுக்கப்பட்ட இ-பாஸ்…! அதிர்ச்சிக்குள்ளான குடும்பம்!

12

சென்னையிலிருந்து திருமணத்திற்கு செல்ல தயாரான மணமகள் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு இ பாஸ் மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல்துறை ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற சந்திரசேகரன் என்பவர் மகளுக்கு வரும் 24ம் தேதி விருதுநகரில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

 

இந்நிலையில் சென்னையில் இருந்து வேன் மூலம் மணமகள் உட்பட 7 பேரை மட்டுமே அழைத்து செல்ல திட்டமிட்டவர் இ பாஸ் பெற ஆன்லைனில் விண்ணப்பித்தார். ஆனால் இ பாஸ் நிராகரிக்கப்பட்டதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இதை தொடர்ந்து மன உளைச்சலுக்கு பிறகு சந்திரசேகரன் மீண்டும் இ பாஸ் கேட்டு விண்ணப்பிக்க அவரது குடும்பத்தினருக்கு இ பாஸ் வழங்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon