--- --:--:-- --

விமானத்தில் பிஸ்னஸ் கிளாஸ் இருக்கையை மற்றொருவருக்கு விட்டு கொடுத்த தோனி..!

9.1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி ஒருவருக்கு தோனி விமானத்தில் பிசினஸ் கிளாஸ் இருக்கையை விட்டு கொடுத்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் அந்த நிர்வாகி உங்கள் கால்கள் நீளமாக உள்ளன.

 

அதனால் பிஸினஸ் க்ளாஸ் இருக்கையில் அமருங்கள். நான் சாதாரண இருக்கையில் அமருகிறேன் என்று கூறி வியப்படைய செய்ததாக குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

ஐபிஎல் தொடரில் பங்கேற்க இதுவரை 6 அணிகள் அமீரகம் சென்றடைந்துள்ளன. சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக பெறப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் துபாய் சென்றடைந்து அங்கு தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.

 

மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ, மும்பை இந்தியன்ஸ் அணிகளும் அமீரகம் சென்றடைந்தனர். பஞ்சாப், கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் தனி விமானம் மூலமாக வெள்ளிக்கிழமை அமீரகம் சென்றடைந்தனர்.

 

மீதமுள்ள ஹைதராபாத், டெல்லி அணிகள் விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Right Menu Icon