திருப்பூரில் மது போதையில் இருந்ததுடன் கத்தி வைத்திருந்த இளைஞர்களுக்கு தர்மஅடி..!
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மதுபோதையில் பட்டன் கத்தியுடன் இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த 3 இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பேரூராட்சி அலுவலகம் அருகே சாலை வளைவில் திரும்ப முயன்றவர்கள் விழுந்துள்ளனர். அங்கிருந்தவர்கள் தூக்க முயன்ற போது இளைஞர்கள் மது போதையில் இருந்ததும் அதில் ஒருவன் பட்டன் கத்தி வைத்திருந்ததும் தெரியவந்தது.
போதையில் அதட்டலாக பேசியதால் கோவையை சேர்ந்த ரஞ்சித் குமார் மற்றும் சிராஜ்தீன் அவருக்கு தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.







