--- --:--:-- --

தர்ணாவில் ஈடுபட்டுள்ள எம்.பி.க்களுக்கு தேநீர் பரிமாறிய துணை சபாநாயகர் ஹரிவன்ஸ்:எளிமை,பெருந்தன்மையை, பாராட்டி பிரதமர் மோடி “ட்விட்’!

dgf

நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டாவது நாளாக போராட்டம் நடத்திவரும் எம்.பி.க்களுக்கு மாநிலங்களவை துணை சபாநாயகர் ஹரிவன்ஸ் தேனீர் பரிமாறினார்.

 

மாநிலங்களவையில் துணை சபாநாயகர் ஹரிவன்ஸ் தலைமையில் மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது கடும் அமளி ஏற்பட்டது.

 

அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் 8 பேர் மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு ஒரு வார காலத்திற்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

 

இந்த நடவடிக்கையை கண்டித்து 8 எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே தர்ணாவில் ஈடுபட்டு உள்ளனர் அங்கேயே இரவு உணவை முடித்துக் கொண்டு தங்கினர் தர்ணாவின் போது பாட்டுப்பாடி உற்சாகமடைந்தனர்.

 

இன்று இரண்டாவது நாளாக தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு மாநிலங்களவை துணை சபாநாயகர் ஹரிவன்ஸ் காலை நேரத்தில் தேநீர் வழங்கினார்.

 

சில நாட்களுக்கு முன்னர் தன்னை தாக்கி அவமதித்த எம்பிக்களுக்கு தேனீர் வழங்கிய ஹரிவன்ஸ்சின் எளிமையையும் பெருந்தன்மையையும் தேசத்துடன் சேர்ந்து தாமும் பாராட்டுவதாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon