இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் வானிலை எச்சரிக்கை!
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கேரளா கர்நாடகா மன்னார் வளைகுடா கடலோரப் பகுதிகள் லட்சத்தீவு தமிழகம் ஒடிசா ஆந்திரா கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.







