--- --:--:-- --

சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்)., வி.சி.க ஆகிய கட்சிகள் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

14

சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்)., வி.சி.க ஆகிய கட்சிகள் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து பெட்ரோல், டீசல் விலை உள்பட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!

 

திருப்பூர் மாவட்ட அவிநாசி ஒன்றிய சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்)., வி.சி.க ஆகிய கட்சிகள் இணைந்து இந்திய மக்கள் நலன் காக்க மோடியின் ஒன்றிய அரசை எதிர்த்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசி ஒன்றியம் முழுவதும் 21மையங்களில் உள்ள 110 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

திருமுருகன் பூண்டி நெசவாளர் காலனியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.ஐ.(எம் )., கிளை செயலாளர் சுப்பிரமணியம், சி.பி.ஐ., கிளை செயலாளர் நஞ்சப்பன் ஆகியோர் தலைமை தாஙகினர். ஆர்ப்பாட்டத்தின்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை குறைத்திடுக. விஷம் போல் ஏறிவரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துக.

 

அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7500 வழங்கிடுக. தரமான உணவு தானியங்களை முறையாக வழங்கிடுக. வேளாண் விரோத சட்டங்களை உடனடியாக வாபஸ் வாங்கு. தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக வாபஸ் வாங்கு. தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி வரித்தொகையை உடனே வழங்கு.

 

தடுப்பூசி மருந்துகளை தமிழ்நாட்டிற்கு கூடுதலாக வழங்கிடுக. செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தொழிற்சாலையை தமிழக அரசிற்கு ஒப்படைத்திடு. தமிழக மாணவர்களின் நலன் காக்க நீட் தேர்வை ரத்து செய்திடுக ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 

ஆர்ப்பாட்டத்தில் பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் ராமசாமி, சி.பி.ஐ., இடைக்குழு உறுப்பினர் ஆறுமுகம், சி.பி.ஐ.(எம் ) இடைக்குழு உறுப்பினர் பாலு உள்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon