சூப்பர் மார்க்கெட்டில் வேண்டுமென்றே இருமிய பெண்..! வழக்குப்பதிவு!
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்து அங்கிருந்த இறைச்சி, பேக்கரி உணவு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் மீதுவேண்டுமென்றே இருபிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அந்த பெண்ணுக்கு கொரொனா இருக்கலாமோ என்று சந்தேகத்தில் சுமார் 35 ஆயிரம் டாலர் மதிப்புள்ள பொருட்களை குப்பைத்தொட்டி அனுப்பி விட்டதாக சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஹலோ பெரு நகரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். கைது செய்யப்பட்ட பெண் திட்டமிட்டு இந்த செயலை நடத்தியதாக தெரிவித்த அவர் போலீசார் அவருக்கு மனநல பாதிப்பு இருக்கிறதா என்று சோதனை நடந்து முடிந்த பிறகு கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.
குறிப்பிட்ட பெண்ணுக்கு கொரொனா பாதிப்பு இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள், எனினும் அவருக்கு அது தொடர்பான அனைத்து சோதனைகளும் நடத்தப்படும் என கூறியுள்ளனர்.






