தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 2,487 பேருக்கு புதிதாக கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 34 ஆயிரத்து 429 ஆக அதிகரித்துள்ளது. 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 504 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 4 ஆயிரத்து 31 ஆக உயர்ந்துள்ளது.
19 ஆயிரத்து 154 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 214 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டங்களைப் பொருத்தவரை சென்னையில் 657 பேரும், கோவை மாவட்டத்தில் 220 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 151 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 122 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 110 பேரும் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர்.







