--- --:--:-- --

பள்ளிகள் திறப்பு அறிவிப்பதற்கு முன்பே கருத்துக் கேட்பை நடத்தாதது ஏன்?

11

ள்ளிகள் திறப்பை அறிவிப்பதற்கு முன்பே கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்தாதது ஏன் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து டிவீட் செய்துள்ளார்.

 

அதில் கொரொனா தொற்று முற்றிலும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது என நிரூபிக்கப்படாத நிலையில் அவசரமாக பள்ளிகளை ஏன் திறக்க வேண்டும் என கேள்வி எழுப்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

திமுக சொல்லி பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்கவில்லை என்று கூறுவதற்காக கண்துடைப்பு கருத்து கேட்பு நாடகத்தை அரசு அரங்கேற்றுவதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்

 

. இந்த கருத்துக் கேட்பு கூட்டம் பற்றி முடிவை பள்ளிகள் திறப்பை அறிவிப்பதற்கு முன்பே அல்லவா செய்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். எல்லாவற்றையும் தலைகீழாக செய்வதுதான் அதிமுக அரசு என்றும் ஸ்டாலின் விளக்கியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon