--- --:--:-- --

மும்பையில் குறைந்து வரும் கொரொனா பாதிப்பு!

7

கொரோனா பரவல் வேகம் மிக அதிகமாக இருந்த மும்பையில் கடந்த ஒரு வாரமாக பாதிப்பு குறைந்து வருகிறது. இந்தியாவில் கொரொனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கியது முதல் மும்பை நகரமே பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கையில் முன்னிலையில் இருந்தது. ஏப்ரல், மே மாதங்களில் இந்த மாதத்தின் பிற்பகுதி வரையில் அங்கு தொற்று பரவல் மிக அதிகமாகவே இருந்தது.

 

பின்னர் மகாராஷ்டிரா அரசின் கடும் கட்டுப்பாடுகளாலும் மக்கள் அளித்த ஒத்துழைப்பாலும் கடந்த ஒரு வாரமாக பாதிப்பு கணிசமாக குறைய தொடங்கியுள்ளது. மாறாக தலைநகர் டெல்லியில் தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை மும்பையை மிஞ்சியுள்ளது.

 

கடந்த ஒரு வாரத்தில் மும்பையில் 7 ஆயிரத்துக்கும் குறைவான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் டெல்லியில் இந்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று மடங்காக உள்ளது. மும்பையில் நாள்தோறும் நான்காயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது நான்காயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது.

 

கொரொனா பரவல் இரட்டிப்பாக எடுத்துக்கொள்ளும் காலம் கடந்த மாதத்தில் 11 நாட்கள் என்று இருந்த நிலையில் கடந்த வாரம் பாதிப்புகளை வைத்து பார்க்கும் போது தற்போது 40 நாட்களாக மாறியுள்ளது. இது மிகுந்த ஆறுதல் அளிக்கக்கூடியது. ஒரு மாதத்திற்கு முன்பு வரை முன்பதிவு குணமடைந்தோர் விகிதம் வெறும் 22 விழுக்காடாக இருந்த நிலையில் தற்போது 55 விழுக்காட்டை கடந்துள்ளது.

 

மும்பையில் இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 39 ஆயிரத்து 149 பேர் குணமடைந்த நிலையில் 27 ஆயிரத்து 659 பேர் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. எனினும் கொரொனா பரவல் குறைய தொடங்கியுள்ளது மும்பை மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon