100 ரூபாய் மின்கட்டணம் கட்டி வந்த குடும்பத்துக்கு ரூ.2.92 லட்சம் மின்கட்டணம் எனக்கூறியதால் அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தார்..!
கரூர் அருகே வீட்டு மின் இணைப்பிற்கு 2.92 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்ததை கண்டு கூலித் தொழிலாளி ஒருவர் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார். செல்லண்டிபலயம் தட்டாங்காடு பகவதி நகரில் வசித்து வரும் வீரப்பன் என்பவருக்கு தான் இந்த மின் கட்டணம் வந்துள்ளது.
வீரப்பன் தமது குடும்பத்தினருடன் குடியிருப்பது இரண்டு சிறிய அளவிலான வீடுகளே. இதில் ஒரு வீட்டுக்கு 100 யூனிட்டுகள் வருவதால் இவர் மின் கட்டணம் செலுத்தியதே இல்லையாம். மற்றொரு சொற்ப அளவிலேயே மின் கட்டணம் செலுத்தி வந்துள்ளாராம் வீரப்பன். ஆனால் இந்த மாதம் அவரது வாழ்க்கையில் சூறாவளி மட்டுமல்ல பெரும் சுனாமியை இறக்கி விட்டதாம் மின்வாரியம்.
இதற்கு பதிலளித்துள்ள மின்வாரிய அதிகாரிகள் சில சர்வீஸ்களின் எண்களை கணினியில் ஏற்றும்போது புள்ளி வைக்காமல் ஏற்றி இருந்தால் இதுபோன்ற தவறுகள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். தங்களின் குளறுபடியை மறைப்பதற்கு சரியான தகவல்களை தெரிவிக்க மின் துறையினர் மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.






