--- --:--:-- --

முதியோர் பணம் பெறுவதற்காக 100 வயதான தாயை கட்டிலில் வைத்து இழுத்து சென்ற மகள்!

10

பிரதமரின் நிதி உதவி தொகையை பெற தனது நூறு வயது தாயை பெண் ஒருவர் கட்டிலில் வைத்து இழுத்து சென்ற சம்பவம் ஒரிசாவில் நிகழ்ந்துள்ளது. ஒடிசா மாநிலம் நவப்புரா மாவட்டத்தில் வசிக்கும் லகே பாகல் என்ற நூறு வயது மூதாட்டியின் ஜன்தன் வங்கி கணக்கில் பிரதமரின் நிதி உதவி தொகை வந்துள்ளது. அந்த பணத்தை எடுக்க அந்த மூதாட்டியின் 60 வயது மகள் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று உள்ளார்.

 

ஆனால் பயனாளியே நேரில் வர வேண்டும் என வங்கி மேலாளர் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து உடல்நிலை முடியாமல் படுத்த படுக்கையாக இருந்த தாயை கட்டிலில் வைத்தபடியே அவரது மகள் இழுத்து சென்றுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon