--- --:--:-- --

தாயை மீட்ககோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மகள் மனு..!

13

குவைத்தில் தவிக்கும் தனது தாயை மீட்ககோரி 14 வயது சிறுமி தனது பாட்டியுடன் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்தார்.

 

காரைக்குடி அருகே நேபாளத்தை சேர்ந்த சித்ரா என்பவர் கணவனை இழந்த நிலையில் குடும்ப வறுமை காரணமாக தனது மகளை தாயுடன் விட்டுவிட்டு வீட்டு வேலை செய்யும் பணிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

 

பணிக்காக 2 ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் தற்போது நான்காண்டுகளுக்கு மேலாகியும் சித்ராவை வீட்டு உரிமையாளர் அனுப்பாததாக சொல்லப்படுகிறது.

 

இந்த நிலையில் வீட்டு உரிமையாளர் தனது தாயை அடைத்து வைத்து கொடுமைப் படுத்துவதாக கூறி அவரை மீட்க வலியுறுத்தி சித்ராவின் மகள் கீர்த்தனா தனது வயது முதிர்ந்த பாட்டியுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon