--- --:--:-- --

நடிகை தமன்னா, காஜலுக்கு சம்மன் அனுப்பியுள்ள சைபர் கிரைம் போலீஸ்..!

8

புதுச்சேரியில் கிரிப்டோ கரன்சி மோசடி தொடர்பாக நடிகர்கள் தமன்னா, காஜல் அகர்வாலுக்கு சம்மன் அனுப்ப சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர். முதலீடு செய்தால் அதிக லாபத்தை கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி புதுச்சேரியை சேர்ந்த 10 பேரிடம் சுமார் 2 கோடியே நாற்பத்தி இரண்டு லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணையின் பொழுது சினிமா நடிகர் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் அந்த நிறுவனத்தின் விழாக்களில் கலந்து கொண்டதும் அதன் மூலம் ஆயிரக்கணக்கானோரிடம் இருந்து பணம் திரட்டப்பட்டதும் தெரிய வந்தது.

 

இதனால் இருவரும் அந்த நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில் கிரிப்டோ கரன்சி மோசடி தொடர்பாக நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வாலுக்கு சம்மன் அனுப்ப சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 

Right Menu Icon