மீனவர்கள் இன்று முதல் உண்ணாவிரதம்..!
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வர மீனவர்கள் இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் தொடர்கதை ஆகியுள்ளது.
இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படாததால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
ஏற்கனவே காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் இன்று முதல் உண்ணாவிரதத்தை தொடங்க உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





