--- --:--:-- --

தற்கொலை செய்து கொண்ட சாமியார் விடுத்த சாபம்..! என் ஆத்மா உன் குடும்பத்தையே விடாது..!

6

புலியம்பட்டி குண்டங்கள் காடு பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் சுற்று வட்டார மக்களுக்கு தாயத்து கட்டுவது, மந்திர கயிறு கட்டுவது, பேய் ஓட்டுவது போன்ற வேலைகளை செய்து வந்ததாகவும் அவரை அப்பகுதி மக்கள் சிவனடியார் என்று அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

 

கடந்த வாரம் அவரை பார்க்க வந்த பெண் ஒருவருக்கு எந்திரம் கட்டிவிட்டு அந்தப் பெண் வாங்கி வந்த உணவை சரவணன் சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மைக்கேல் என்பவர் சிவனடியாரையும் அந்தப் பெண்ணையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

 

மேலும் இருவரையும் தனது செல்போன் மூலம் படம் எடுத்துவிட்டு என்ன செய்யப் போகிறேன் பார் என சொல்லிவிட்டு உதவி ஆய்வாளர் மைக்கேல் ஆண்டனி சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மைக்கேல் சிவனடியார் சரவணனை தாக்கியபோது அவரது மகன் சங்கர், மகள் கவிதா ஆகிய இருவரும் நேரில் பார்த்துள்ளனர்.

 

தனது குழந்தைகள் முன்பே தன்னை அவர் அடித்ததால் மனமுடைந்த சரவணன் சனிக்கிழமை காலை வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை சிவனடியார் சரவணன் வீட்டு அருகே உள்ள காட்டுப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

 

அங்கு சென்று உறவினர்கள் பார்த்தபோது சரவணன் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இந்தநிலையில் சிவனடியார் சரவணன் செல்போனில் தற்கொலைக்கு முன்னர் பதிவு செய்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது. அதில் தனது ஆத்மா மைக்கேலின் குடும்பத்தை விடாது என சிவனடியார் கூறுவது போன்ற காட்சிகள் உள்ளன.

 

தகவலறிந்து வந்த போலீசார் சரவணன் உடலை அங்கேயே வைத்து பிரேத பரிசோதனை செய்து அருகில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர். மேலும் சரவணன் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதனிடையே போலீசார் மிரட்டியதால் அவர் மீது புகார் கொடுக்கவில்லை என்றும் இந்த விவகாரத்தில் தங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் சிவனடியார் மகன் மனைவி உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

Leave a Reply

Right Menu Icon