--- --:--:-- --

கொரோனா அச்சுறுத்தல்:இலங்கை முழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு!!

18

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் 23-ந் தேதி வரை 4 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா பாதிப்பால் தீவு நாடான இலங்கையும் தத்தளித்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 60 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறியுடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் வைரஸ் பரவலை தடுக்க இலங்கை அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் 3 நாட்களுக்கு நாடு முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெறுவதாக இருந்த பொதுத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

கொரோனா பாதிப்பு அதிகம் காணப்பட்ட வத்தலை, நுகாம்பே உள்ளிட்ட 7 பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மாலை 6 மணி முதல் 23-ந் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. இதனால் இந்த 4 நாட்களும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon