விமானங்கள் இயக்குவதற்கான தடை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு..!
வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானங்கள் இயக்குவதற்கான தடையை மத்திய அரசு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. கொரொனா பரவலை கருத்தில் கொண்டு வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானங்களை இயக்க கடந்தாண்டு மார்ச் 23-ஆம் தேதி முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
கொரொனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது அலை காரணமாக தற்போது வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்குவதற்கான தடையை மேலும் ஒரு மாதம் நீட்டித்து மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
இதை அடுத்து வரும் ஜூன் 30ம் தேதி வரை வழக்கமான விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் அமெரிக்கா ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 28 நாடுகளுடன் மத்திய அரசு ஒப்பந்தங்களை மேற்கொண்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.






