சிதம்பரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை..!
சிதம்பரம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி படையெடுக்கும் முதலைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இரட்டை குளத்தில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
இதனைப் பார்த்து ஆட்டோ ஓட்டுநர் தன் கையில் வைத்திருந்த வலை போன்ற ஒரு பொருளை முதலை மேல் போட்டு அதன் வேகத்தை கட்டுப்படுத்தி வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் முதலையை பிடித்து கொண்டு போய்விட்டனர்.
புயலின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தண்ணீரில் அடித்து வரப்பட்ட முதலைகள் மழை நீர் தேங்கிய குட்டை தண்ணீரில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.






