--- --:--:-- --

பலத்த கடல் சீற்றத்தால் பாம்பன் பாலம் மீது கிரேன் மோதி விபத்து..!

7

லத்த கடல் சீற்றத்தால் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீது கிரேன் மோதி விபத்து ஏற்பட்டது. பாம்பனில் புதிய பாலம் அமைக்கப்படுவதால் கட்டுமான பணிகளுக்காக இரும்பு மிதவைகள் மீது கிரேன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இரவில் வீசிய காற்றினால் மிதவை மீதிருந்த கிரேன் ரயில் தூக்குப் பாலத்தின் மீது மோதியது.

 

இதையடுத்து சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த அதிவிரைவு ரயில் மண்டபத்திலேயே நிறுத்தப்பட்டது. விபத்து ஏற்படுத்திய கிரேனை ரயில்வே ஊழியர்கள் படகுகள் மூலம் அகற்றினர்.

Leave a Reply

Right Menu Icon