திருமணத்திற்கு பின்பும் நடிக்கப் போவதாக நடிகை காஜல் அறிவிப்பு..!
பிரபல நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கௌதமை திருமணம் செய்துகொண்டார் . மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் 50 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்கும் காஜல் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்க போவதாக அறிவித்துள்ளார்.







