துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்..! ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானது..!
துருக்கியின் டோர்டெக்கானிஸ் தீவுகள் கூட்டத்தை மையப்படுத்தி இந்த அதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானது. இதனால் பொதுமக்கள் வீடுகள், கட்டிடங்களில் இருந்து அலறியடித்தபடி வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் குலுங்கின. சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. 10க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் துருக்கியின் கடற்கரை பகுதியில் மிதமான அளவில் சுனாமி தாக்கியதாக காட்சிப் பதிவுகள் வெளியாகியுள்ளன.






