--- --:--:-- --

தேர்தல் கட்டுப்பாடுகள் இன்று முடியும் நிலையில் தேர்தல் ஆணையம் ஆலோசனை..!

2

தேர்தல் நடைபெற உள்ள உத்திரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பரப்புரை கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீடிப்பது குறித்து தேர்தல் ஆணையம் என்று முடிவெடுக்க உள்ளது.

 

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தராகண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெறு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு 15ஆம் தேதி வரை அதாவது இன்று வரை தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.

 

மேலும் வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொள்வது போன்றவற்றிற்கு அனுமதி இருந்தாலும் அதற்கும் 16 வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதற்கான தடைகளும் கட்டுப்பாடுகளும் இன்றுடன் முடிவடையும் நிலையில் அவற்றை மேலும் நீடிப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது.

 

இதற்கிடையே அரசு தொலைக்காட்சியில் பரப்புரை மேற்கொள்ள அனுமதிக்கப்படும் நேரத்தை அதிகரிப்பது குறித்து தேர்தல் ஆணையம் தடை செய்ய போகிறது. இதற்கிடையே உத்திரப்பிரதேசத்தில் முதல் கட்ட வாக்குப் இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

Right Menu Icon