கோவை அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கருணை !!!
கோவை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஊரடங்கினால் தங்களிடம் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் 41,79,720 பாதிக்கப்பட்டுள்ளதோடு 2,83,846 பேர் உயரிழந்துள்ளனர்.
கொரோனாவின் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67,152.கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,452லிருந்து 20,917ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,109லிருந்து2,206ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்திலும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 7204 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு 3 வது முறையாக நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது.இதனால் பலர் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.இவர்களின் நிலையை கருத்தில் கொண்டு மாநில அரசு சார்பில் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.தன்னார்வலர்கள் பலரும் தாமாக முன் வந்து பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் ஊரடங்கினால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள புஜங்கனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.தற்போது அமலில் உள்ள ஊரடங்கினால் தங்களிடம் பயிலும் மாணவர்களின் பொருளாதார நிலை கவனத்தில் கொண்டு கவலையடைந்தனர்.

இதனை கருத்தில் கொண்டு பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட ஆசிரியர்கள் உட்பட பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் இணைந்து பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவ முன்வந்தனர். இந்த நிலையில் இன்று பள்ளி தலைமையாசிரியர் சத்தியமூர்த்தி,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் இணைந்து தங்களிடம் பயிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களின் குடும்பத்தினர் சுமார் 100 க்கும் மேற்பட்டோர்க்கு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
இச்சம்பவம் மற்ற ஆசிரியர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளது.கோவை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஊரடங்கினால் தங்களிடம் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







