--- --:--:-- --

கொரோனாவுக்கு மலேரியா மருந்தை குடித்த மருத்துவர் உயிரிழப்பு!

6

கொரொனா வராமலிருக்க மலேரியா எதிர்ப்பு மருந்தை குடித்த அசாம் தனியார் மருத்துவமனை மருத்துவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

நாட்டில் கொரொனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் குடும்பத்தினருக்கு ஹைட்ராக்ஸிக்கிலோராக்குயின் மலேரியா எதிர்ப்பு மருந்தை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

 

இந்த நிலையில்தான் தனியார் மருத்துவமனை மருத்துவ நிபுணரான 44 வயது நபர் அதை குடித்த பிறகு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த மருந்துதான் மாரடைப்புக்கு காரணமா என்பது தெரியவில்லை.

 

அதை குடித்த பின் நண்பரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு உடல்நிலை சரியில்லை என செய்தி அனுப்பியதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Right Menu Icon