--- --:--:-- --

கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் இருந்த இளைஞன் தப்பியோட்டம்!

5

கிருஷ்ணகிரியில் இருந்து கொரொனா அறிகுறியுடன் தப்பிய இளைஞரை காஞ்சிபுரத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தங்கி பணிபுரிந்து வந்த இளைஞர் ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊரான கிருஷ்ணகிரி திரும்பியதாக கூறப்படுகிறது.

 

அப்போது அவருக்கு கொரொனா அறிகுறி இருந்ததால் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீரென மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது. தகவலின்பேரில் காஞ்சிபுரத்தில் பதுங்கியிருந்த நபரை மடக்கிப் பிடித்த போலீசார் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Leave a Reply

Right Menu Icon