--- --:--:-- --

கரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு

14

சீனாவில் வேகமாக பரவி வரும் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. 300க்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இதனிடையே அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பகுதியில் முதன் முதலாக ஒருவர் இந்நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. கடந்த வாரம் அமெரிக்கா வந்த அந்த நபர் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டார் .

 

அப்போது அந்நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது . உகா நகரிலிருந்தும் ஹாங்காங்கில் இருந்து வரும் பயணிகளுக்கு அமெரிக்காவின் நியூயார்க் சான்பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

 

இதேபோல் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது. உலக சுகாதார அமைப்பு இந்த வைரஸ் பாதிப்பை ஆய்வு செய்து சர்வதேச அளவில் இதனை சுகாதார அவசர நிலை அறிவிப்பு குறித்து பரிசீலித்து வருகிறது.

Leave a Reply

Right Menu Icon