--- --:--:-- --

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு இரட்டிப்பு ஆகியுள்ளது!

8

தமிழகத்தில் கொரொனா பாதிப்படைந்தோர் எண்ணிக்கை ஒரே நாளில் இரட்டிப்பாகியுள்ளது. வெகுவாக கூடியுள்ளது இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரொனா நோய் தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் சென்னையில் அதிகம் பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆயினும் இது குறித்த சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூற்றுப்படி அதிக பரிசோதனைகள் நடைபெறும் நிலையில் தொற்று கண்டறியப்படுவது அதிக அளவில் இருக்கத்தான் செய்யும் என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார். இதன் மூலம் ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் கொரொனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக எகிறியுள்ளது.

 

இன்றைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 377 நபர்கள் ஆண்கள் , 150 பேர் பெண்கள். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 2,392 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,157 பெண்களும், ஒரு திருநங்கையும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்றைக்கு மட்டும் தமிழகத்தில் 12,863 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon