கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்..!
கர்ப்பிணி பெண்களுக்கு கொரொனா அறிகுறி இல்லை என்றாலும் பிரசவத்திற்கு முன்பு பரிசோதனை கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரொனா பரிசோதனை குறித்து புதிய வழிகாட்டுதல்களை அந்த அமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சாதாரண பகுதியில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் வெளிமாநில தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கியுள்ள இடங்களில் நிவாரண முகாம்கள் ஆகியவற்றில் தங்கியிருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் அறிகுறி இல்லாத போதும் பிரசவத்திற்கு ஐந்து நாட்கள்முன்னதாக சோதனை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பெண்களிடம் பரிசோதனை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பிரசவ இடத்தில் செய்து இருக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.







