--- --:--:-- --

இலவசமாக கொரொனா தடுப்பூசி போடப்படும் : மத்திய அமைச்சர் பிரதாப்

6

நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரொனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கி தெரிவித்துள்ளார்.

 

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி போடப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

 

இது சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் ஒடிசா மாநிலம் பாலாசூரில் நடைபெறும் இடைத் தேர்தல் பரப்புரையில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் பிரதாப் அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்றும் இதற்காக நபர் ஒருவருக்கு 500 ரூபாய் செலவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon