--- --:--:-- --

இன்று முதல் தமிழகத்தில் கொரொனா தடுப்பூசி பணிகள் தொடக்கம்..!

1

மிழகத்திற்கு 5 லட்சத்து 36 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 20,000 கோவாக்ஸின் தடுப்பூசிகளும் வந்து சேர்ந்துள்ளன. அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்பட்டு குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

 

தமிழகம் முழுவதும் 2,850 இடங்களில் கொரொனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக 166 மையங்களில் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது. இதற்காக முன் களப்பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணியும் நடைபெற்றது.

 

இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் தடுப்பூசி போடும் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரையில் தொடங்கி வைக்கிறார்.

 

ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Leave a Reply

Right Menu Icon