--- --:--:-- --

தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

01

ன்னியாகுமரி, நீலகிரி, வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மத்திய வங்கக்கடல் பகுதிகள் முதல் கடலோர கர்நாடகா வரை கடலோர ஆந்திரா பிரதேசம், தெலங்கானா மற்றும் உள் கர்நாடகா வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளும் ஒரு வாரத்திற்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

குறிப்பாக, நெல்லை, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் எனக் கணித்துள்ளது.

 

இவை தவிர, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், திண்டுக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon