தமிழகத்தில் இன்று 5892 பேருக்கு கொரோனா பாதிப்பு..! சென்னையில் 20 நாட்களுக்குப் பிறகு ஆயிரத்திற்கு கீழாக குறைந்தது!!
தமிழகத்தில் இன்று 5892 பேருக்கு கெரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழப்பும் 92 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் 20 நாட்களுக்குப் பிறகு தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கு கீழாக குறைந்து 968 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா நிலவரம் ஒரே சீராக தினசரி பாதிப்பு 6 ஆயிரம் என்ற அளவிலும், உயிரிழப்பு நூறை ஒட்டியும் பதிவாகி வருகிறது. இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின படி, இன்று 5892 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,851 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் மேலும் 92 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 7608 ஆக உயர்ந்துள்ளது. இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 6110 ஆகும்.
சென்னையில் 20 நாட்களுக்குப் பிறகு ஆயிரத்திற்கும் கீழாக இன்று 968 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு1,38, 124 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 82,901 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இதுவரை மொத்தம் 50 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் இன்றும் அதிக பாதிப்பாக 593 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக கடலூரில் 590, செங்கல்பட்டு 378, திருவள்ளுர் 258, ேசலம் 208 என மாவட்டங்களில் அதிக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.







