--- --:--:-- --

இந்தி தெரியாததால் அவமானப்படுத்தப்பட்ட இயக்குனர் வெற்றி மாறன்..!

13

2011 ஆம் ஆண்டு டெல்லி விமான நிலையத்தில் இந்தி தெரியாததால் தீவிரவாதி என தான் அவமானப்படுத்தப்பட்டதாக இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.

 

ஆனந்த விகடன் இதழுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் கன்னட திரைப்பட விழாவில் கலந்துகொண்டு திரும்பிய போது தன்னிடம் இந்தியில் பேசியதாகவும் அப்போது தனக்கு தெரியாது என கூறியதால் தமிழர்களும், காஷ்மீரிகளும் இப்படித்தான் தொடர்ச்சியாக பிரிவினைவாதம் பேசுவீர்கள் என அதிகாரி குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.

 

அதனால் விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் தன்னை தனியாக நிற்க வைத்ததாகவும் வெற்றிமாறன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon